முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் அறக்கட்டளை நடத்தும் மருத்துவக் கல்லூரி கட்டடங்களுக்கு, நகரமைப்பு சட்ட விதிகளை தளர்த்தி, தமிழக அரசு சலுகை அளித்துள்ளது.
தி.மு.க., பிரமுகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகனின், ’லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை’ சார்பில், பல கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. சென்னை, குரோம்பேட்டை, சி.எல்.சி., ஒர்க்ஸ் சாலையில், இந்த அறக்கட்டளையின் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில், கூடுதலாக சில அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கான வரைபடத்தில் சாலை அகலம், கூடுதல் கட்டடம் கட்டுவது உள்ளிட்ட விதிமீறல்கள் இருந்ததால் திட்ட அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த அறக்கட்டளையின் கோரிக்கை அடிப்படையில், நகரமைப்பு சட்டத்தின், 113வது பிரிவில் வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த கட்டுமான திட்டத்துக்கு விதிவிலக்கு அளிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை, பிப்., 29ல் பிறப்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டு, அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இதேபோல், குரோம்பேட்டையில், மூன்று மாடிகள் கொண்ட தனியார் குடியிருப்பு; தாம்பரம், முடிச்சூர் சாலையில், இரண்டு தளங்கள் கொண்ட தனியார் கட்டடம் ஆகியவற்றுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment