மத்தியப் பிரேதச மாநிலம், செகோர் மாவட்டத்தில் மொபைல் போன் பேட்டரி வெடித்ததால் பலத்த தீக்காயம் அடைந்த சிறுவன் உயிரிழந்தான். செகோர் மாவட்டம், பட்கோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஃபதேஹ் என்பவரின் மகன் உவேஷ் (10). இச்சிறுவன் நேற்று தனது மொபைல் போனில் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தான். இந்நிலையில் போன் பேட்டரி திடீரென வெடித்ததில் சிறுவனின் ஆடையில் தீப்பற்றி மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சிறுவனை அஷ்தா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இது தொடர்பாக சித்திக்கஞ்ச் காவல் நிலையை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment