மதுரையில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் நடந்தது. அமைப்பு செயலாளர் ராஜேந்திர பிரசாத் முன்னிலை வகித்தார். செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார்.
கூட்டத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் பெறும் அனைத்து மாணவர்களின் மதிப்பெண் விபரங்களை கல்வித்துறை ’ஆன்லைனில்’ ஒவ்வொரு ஆண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும். 6 -9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் செயல்பாடுகளில் இடையூறு இல்லாமல் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு ஆசிரியர்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.தொடக்க மற்றும் நடுநிலை போன்று உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்த எஸ்.எஸ்.ஏ., திட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment