மதுரை வேடர்புளியங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சிறந்த மூலிகை தோட்டம் வளர்த்தல் மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பிற்கான விருது வழங்கப்பட்டது.
இதற்காக சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் பள்ளிக்கு ரூ. 10 ஆயிரம் ஊக்கத் தொகையை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி வழங்கினார். இந்த விழாவில் ஊராட்சி தலைவி சுந்தரி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் முத்துப்பிள்ளை முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் இந்துமதி உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment