தமிழகத்தில் கல்வி வியாபாரமாக மாறிவிட்டதாக திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி வருத்தம் தெரிவித்தார். மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் கண்டன பேரணி பொள்ளாச்சியில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. பேரணியை, திண்டுக்கல் சட்டப் பேரவை உறுப்பினர் பாலபாரதி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பின்னர் பாலபாரதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கட்டண விதிமுறைகளை தனியார் பள்ளிகள் கடைப்பிடிப்பதில்லை. கட்டணம் செலுத்தாத குழந்தைகளை பள்ளி நிர்வாகங்கள் தண்டிப்பது தொடர்கதையாகிவிட்டது என்றார்.
பேரணியை தொடங்கி வைத்து பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசுகையில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும். தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வாங்குவது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment