வரும் 15-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ள தண்டராம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு தேர்வின் முக்கியத்துவம் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை எஸ்.மாதவி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை ஆர்.கவிதா முன்னிலை வகித்தார். தமிழாசிரியை பி.கஸ்தூரி வரவேற்றார்.
முதுகலை தமிழாசிரியை கோவிந்தம்மாள், அறிவியல் ஆசிரியர்கள் எஸ்.மாதேஷ், ஏ.பிரான்சிஸ், கணித ஆசிரியை ஆர்.சாரதா, சமூக அறிவியல் ஆசிரியர் என்.தியாகராஜன் உள்ளிட்டோர் தேர்வை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள், மேல் படிப்பின் அவசியம், பெண்களின் கல்வி அவசியம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மாணவிகளுக்கு கருத்துக்களை வழங்கிப் பேசினர். தொடர்ந்து, மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment