உசிலம்பட்டி ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் 172 பேருக்கு பதில் 11 மாணவர்கள் மட்டுமே இருந்ததால் அதிர்ச்சியுற்ற ஆர்.டி.ஓ., பாலசுப்பிரமணியன், காப்பாளர்கள், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் கே.வீரராகவ ராவிற்கு பரிந்துரை செய்தார்.
இங்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் ராஜன் பாபு மாணவர் விடுதி, காந்திஜி மாணவர் விடுதி இயங்குகின்றன. நேற்று முன் தினம் இரவு ராஜன்பாபு விடுதி மாணவர் ஒருவர் வயிற்று வலியால் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பெற்றோர் விடுதியில் காப்பாளர்கள், சமையலர்கள், காவலர்கள் இல்லை என ஆர்.டி.ஓ., பாலசுப்பிரமணியிடம் புகார் செய்தனர்.
இரு விடுதிகளையும் ஆர்.டி.ஓ., ஆய்வு செய்தார். காந்திஜி விடுதியில் காப்பாளர் சுரேஷ், சமையலர்கள், காவலர்கள் இல்லை. வருகைப்பதிவேட்டில் 96 மாணவர்கள் தங்கியிருப்பதாக இருந்தது. ஆனால் 8 மாணவர்கள் மட்டும் இருந்தனர். ராஜன்பாபு விடுதியில் காப்பாளர் புதுராஜா, சமையலர், காவலர்கள் இல்லை. 76 மாணவர்களுக்கு 3 பேர் மட்டுமே இருந்தனர். இதையடுத்து விடுதி காப்பாளர்கள், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு ஆர்.டி.ஓ., பரிந்துரை செய்தார்.
No comments:
Post a Comment