தேர்தல் நேரத்தில் ஆசிரியர்களை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தொடக்க கல்வித்துறையில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஒருங்கிணைந்து, இரண்டு பேரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தி வருகிறது.
அவர்கள், ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருகின்றனரா, முழு நேரமும் பள்ளியில் இருக்கின்றனரா என்பதை கண்காணித்து வருகிறது. அந்த குழு ஆய்வு குறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களிடம் அறிக்கை அளிக்கிறது. தேர்தல் நேரத்தில், அதிகாரிகள் கண்காணிப்பதால் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தொடக்க கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தொடர் புகார் வந்த பள்ளிகள், கல்வி தரத்தில் பின்தங்கிய பள்ளிகளில் மட்டுமே ஆய்வு நடத்துகிறோம். ஆசிரியர்களின் வருகை, நடவடிக்கைகளை கண்காணிக்கிறோம். தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தேர்தல் தொடர்பான ஆய்வு கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment