பிளஸ் 2 தேர்வில், பாடங்களின் உள் பகுதியிலிருந்து கேள்விகள் இடம் பெறும் நடைமுறை அமலாகியுள்ளதால், தனியார் பள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளன. மாணவர்களை, சென்டம் வாங்க வைக்கும் வகையில் தனியார் பள்ளிகளில், கல்லுாரி பேராசிரியர்கள் மூலம் அவசர சிறப்பு வகுப்புகளை துவங்கி உள்ளனர்.
புதிய மாற்றம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 4ல் துவங்கியது. தமிழ் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் முடிந்துள்ளன. இந்த தேர்வில், தேர்வுத்துறையின் முந்தைய அறிவிப்பின் படி, புதிய மாற்றம் அறிமுகமாகியுள்ளது. அதாவது, பாட புத்தகத்தின் பின்பக்க கேள்விகள் மட்டுமின்றி, பாடங்களின் உள் பகுதியில் இருந்தும் கேள்விகள் இடம்பெற்றன. நடந்து முடிந்துள்ள இரண்டு மொழிப் பாட தேர்வுகளிலும் இந்த மாற்றம் அமலாகியுள்ளது.
அதனால், மாணவர்கள் சென்டம் வாங்குவது கேள்விக்குறியாகியுள்ளது. உயர் கல்விக்கு முக்கியமாக விளங்கும் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் போன்ற பாடங்களிலும் இதே போல், உள் பகுதியிலிருந்து வினாக்கள் வரும் என்பதால் அதை சமாளிப்பதற்கான அவசர சிறப்பு வகுப்புகளை, தனியார் பள்ளிகள் துவங்கியுள்ளன.
சிறப்பு செய்தி:எனவே, இந்த பாடங்களை நடத்துவதில் அனுபவம் பெற்ற ஆசிரியர்களையும், கல்லுாரி பேராசிரியர்களையும், தனியார் பள்ளிகள் அழைத்து வந்து விடுமுறை நாட்களில் அவசர சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றன. இந்த வகுப்பில், பாடங்களின் உள்பகுதியில் முக்கிய அம்சங்களில் இருந்து எந்த வினா வந்தாலும் பதிலளிக்கும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment