மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், கேந்திரிய வித்யாலயா எனப்படும், கே.வி., பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில், முதலில், மத்திய, மாநில அரசு பணியாளர்களுக்கே முன்னுரிமை தரப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.வி., பள்ளிகளில் தற்போது மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. மார்ச் 10ல் விண்ணப்பங்கள் பெறுவது நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் யாருக்கு முன்னுரிமை என கே.வி., பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன் விவரம்
மத்திய அரசு பணியாளர், முன்னாள் ராணுவ வீரர் குழந்தை, அயல் நாட்டு பணியிலுள்ளோர் குடும்பத்தினருக்கு முன்னுரிமை தரப்படும்.
மத்திய அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவன அதிகாரிகள், பணியாளர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை தரப்படும்.
அதன் பின், மாநில அரசு பணியாளர் குழந்தைகளுக்கும், அதில் இடங்கள் மீதம் இருந்து காத்திருப்பு பட்டியலில் யாரும் இல்லை என்றால் அரசு பணியாளர் இல்லாதவர்களின் குழந்தைகள் மற்றும் வெளிநாட்டினருக்கான குழந்தைகளுக்கு இடம் வழங்கப்படும்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment