தற்காப்பு கலை பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பெரிய காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு, தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
நிறைவு விழாவிற்கு பள்ளி துணை முதல்வர் முருகானந்தம் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் திலகவதி வரவேற்றார். காலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், விரிவுரையாளர் ராமமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மதியழகன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜ்குமார், இந்திரா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கராத்தே பயிற்சியாளர்கள் திருநாவுக்கரசு முன்னிலையில், மாணவிகள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். தற்காப்பு கலை பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர் பொன்னுசாமி, சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment