கொடுமுடி அருகே, ஊஞ்சலூர் பனப்பாளையத்தில், கலைமகள் கல்வி நிலையம் என்ற நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது.
இதன் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை கண்டித்து, அக்கிராமத்தினர், ஈரோடு டி.ஆர்.ஓ., சதீஷிடம் நேற்று மனு கொடுத்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:
இப்பள்ளியில் ஆங்கில கல்வி சிறப்பாக உள்ளது. தலைமை ஆசிரியை நன்றாக பாடம் நடத்துவார். கடந்த காலங்களில் இங்கு படித்தவர்கள் சிறப்பாக உள்ளனர். நிர்வாகத்துக்கும், தலைமை ஆசிரியைக்குமான பிரச்னையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் பள்ளி குழந்தைகளின் கல்வி பாதிக்கிறது. எனவே, அவரை மீண்டும் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment