பிளஸ்2 பொதுத் தேர்வுப் பணியில் ஈடுபடவுள்ள அறை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், இந்துஸ்தான் கலைக் கல்லுாரியில் நடந்தது.
நாளை முதல் நடக்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வை, கோவை மாவட்டத்திலுள்ள, 93 மையங்களில், 35 ஆயிரத்து, 867 மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்கென, கோவை கல்வி மாவட்டத்தில், 2,000 அறை கண்காணிப்பாளர்களும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 260 அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அறை கண்காணிப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்முருகன் தலைமையில் நடந்தது. தேர்வு சமயத்தில் புதிய நடைமுறைகள், மொபைல் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டது; ஒவ்வொருவருக்கும் தனி கையேடு வழங்கப்பட்டது. 2,000 அறை கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment