தமிழகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான புத்தகங்கள் வழங்க மாணவர்கள் குறித்த கணக்கெடுப்புப்பணி துவங்கியுள்ளது.தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. பொதுத்தேர்வுகள் நடந்து முடியும் நிலையில் மெட்ரிக் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை ஆராய மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு பள்ளி நிர்வாகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், 'அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. மூன்று நாட்களாக நடந்து வரும் கணக்கெடுப்பு பணி, இன்னும் ஓரிரு வாரங்களில் முடிந்து இயக்குனரகத்திற்கு அறிக்கை அனுப்பப்படும், என்றார்.
No comments:
Post a Comment