பிஎச்.டி., பட்டத்துக்காக, ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் காலத்தை, ஆசிரியர் அனுபவ காலமாக எடுத்துக் கொள்ளலாம்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.நாடு முழுவதும் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், ஏராளமான பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பும் வகையில், பல்கலைகளுக்கு புதிய சலுகையை, யு.ஜி.சி., வழங்கியுள்ளது.
அதன்படி, 'பல்கலை மற்றும் கல்லுாரிகளில் முதுகலை, ஆராய்ச்சிப் படிப்பு முடித்தவர்களை பணி நியமனம் செய்யும் போது, அவர்களின் அனுபவ காலத்தில், பிஎச்.டி., படிக்கும் காலத்தையும் சேர்க்கலாம்' என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. 'பிஎச்.டி., காலத்தில் விடுப்பு இன்றி ஆய்வுப் பணியில் ஈடுபடும் காலத்தை இதில் கணக்கிடலாம்' எனவும், அதில் கூறப்பட்டுள்ளது.இது, முழு நேர பிஎச்.டி., ஆய்வாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்; பகுதி நேர ஆய்வாளர்களுக்கு பொருந்தாது.
No comments:
Post a Comment