தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 32 மாணவர்கள் பிடிபட்டனர். தமிழகம் மற்றும் புதுவையில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மொழிப் பாடம் 2-ஆம் தாள் தேர்வு புதன்கிழமை (மார்ச் 16-ஆம் தேதி) நடைபெற்றது.
இதில், எளிதான வினாக்களுடன் தேர்வு இருந்ததாகவும், 80-க்கும் அதிகமான மதிப்பெண் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தமிழை மொழிப்பாடமாக எடுத்து தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, மொழிப் பாடம் 2-ஆம் தாள் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 32 தனித் தேர்வர்கள் பிடிபட்டனர். அதிகபட்சமாக வேலூரில் 20 தனித் தேர்வர்களும், திருவள்ளூரில் 11 தனித் தேர்வர்களும் பிடிபட்டனர். திருவண்ணாமலையில் ஒரு தனித்தேர்வர் பிடிபட்டார்.
ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மார்ச் 22-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment