பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்.,20க்குள் முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 44 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதி வருகின்றனர். தமிழ், ஆங்கிலம்,வேதியியல் தேர்வுகள் முடிந்தன.
அரசுத் தேர்வுத்துறை திட்டமிட்டபடி தமிழ், ஆங்கிலம் விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. 74 மையங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் திருத்தும் பணி நடக்கிறது.
ஏப்.,1 ம் தேதி இயற்பியல் தேர்வு நடக்கிறது. 20ம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணியை முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்.,13 ம் தேதி வரை நடக்கிறது. விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.,1 முதல் 25ம் தேதி வரை 79 மையங்களில் நடக்கிறது.
மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண் வருவதால், விடைத்தாள்களை சரியாகத் திருத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment