பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. ஏப்ரல் 20–ந்தேதிக்குள் திருத்தி முடிக்க அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.விடைத்தாள் திருத்தும் பணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு கடந்த 4–ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை 8 லட்சத்து 82 ஆயிரத்து 44 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதி வருகிறார்கள். தமிழ், ஆங்கிலம், வேதியியல் ஆகிய தேர்வுகள் முடிந்து விட்டன.
அரசு தேர்வுகள் துறை திட்டமிட்டபடி தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்களை திருத்தும் பணி நேற்று தொடங்கியது.மொத்தம் 74 முகாம்களில் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும்பணி அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் இந்த பணி தொடங்கியது. ஏப்ரல் 1–ந்தேதி இயற்பியல் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஏப்ரல் 20–ந்தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணியை முடிக்க அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.எஸ்.எஸ்.எல்.சி.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வு ஏப்ரல் 13–ந்தேதி வரை நடக்கிறது. விடைத்தாள் திருத்தும் பணி 79 மையங்களில் ஏப்ரல் 1–ந்தேதி முதல் ஏப்ரல் 25–ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் தவறாக மதிப்பீடு செய்வதால்தான் மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண் வித்தியாசம் வருகிறது. இந்த வருடமாவது சரியாக மதிப்பீடு செய்யுங்கள் என்று அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஏற்கனவே வாய்மொழியாக கூறினார்கள்.இதைத்தொடர்ந்து முதன்மை கல்வி அதிகாரிகள் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறினார்கள்.
No comments:
Post a Comment