தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவிப் பொறியாளர் பணிக்கான தேர்வை, ஒரு லட்சம் பேர் எழுதினர். தமிழ்நாடு மின் வாரியம், எலக்ட்ரிக்கல், 300; சிவில், 50; மெக்கானிக்கல், 25 என மொத்தம், 375 உதவிப் பொறியாளர் பணியிடங்களை, எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப முடிவு செய்துள்ளது.
எழுத்துத் தேர்வு, அண்ணா பல்கலை மூலம், சென்னை உட்பட, 166 மையங்களில் நேற்று நடந்தது. காலை, 10:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை நடந்த தேர்வை, ஒரு லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகள் எழுதினர். இந்த தேர்வு தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படலாம்.
No comments:
Post a Comment