பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதும் போது ஏற்படும் தேர்வு பயம் மற்றும் பதற்றத்தை போக்க, பள்ளிகள் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்படும். சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, 19 ஆண்டுகளாக மத்திய அரசு சார்பில், கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், இன்று துவங்கி, ஏப்., 22ல் முடிகிறது. பள்ளி வகுப்புகள், தொலைபேசி, இணையதளம் என, பல வகைகளில் கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. 76 நிபுணர்கள் கவுன்சிலிங் பணியில் ஈடுபடுகின்றனர். தொலைபேசி வழியாக கவுன்சிலிங் தேவைப்படுவோர், 1800 11 8004 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில், காலை, 8:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை தொடர்பு கொண்டால், இலவசமாக கவுன்சிலிங் பெறலாம்.
No comments:
Post a Comment