JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Friday, March 2, 2012
தொடக்கக் கல்வி - மார்ச் 8 - அனைத்து பள்ளிகளிலும் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டும்.
தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 5156 / J3 / 2012, நாள். 03.02.2012.
இன்று மகளிரின் நிலை எல்லாம் துறைகளிலும் உயர்ந்துள்ளது. இத்தனை சிறப்புமிக்க மகளிரை பெருமைப்படுத்தும் விதமாக மகளிர் தினம் உலக அளவில் மார்ச் 8ல் கொண்டாடப்பட உள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் சாதனைப் படத்த பெண்களைப் பற்றியும், பெண்கள் முன்னேற்றம் பெண்கள் கல்வி சார்ந்து அரசு மேற்கொண்டு வரும் அரிய திட்டங்கள் பற்றியும் மாணவர்களிடையே காலை வழிப்பாட்டுக் கூட்டத்தில் எடுத்து கூற வேண்டும்.
பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற போட்டிகள் நடத்தி தொடர் நிகழ்வாக, உலக மகளிர் தினத்தில் சிறப்பாக பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை அளித்து பாராட்டுகளை தெரிவித்து மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment