திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டலில் கூடுதலாக 5 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் 3-ஆம் இடத்தை பெற்றுள்ளார்.
நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகளின் மறுகூட்டல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி செளந்தர்யா தமிழில் கூடுதலாக 5 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.
அவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ்- 97,ஆங்கிலம்- 99, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும் என மொத்தம் 496 மதிப்பெண்களை பெற்றுள்ளார். மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்ற மாணவி செளந்தர்யாவை பள்ளித் தாளாளர் மருத்துவர் அ.ராமமூர்த்தி, முதல்வர் இரா.செல்வவைஷ்ணவி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.
No comments:
Post a Comment