தொழில் வணிகத் துறையில் காலியாக உள்ள, இளநிலை சோதனையாளர் தரம் - 2 பதவிக்கான எழுத்துத்தேர்வு, ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ளது.அன்று காலை, 10:00 - பிற்பகல் 12:00 மணி வரை, சென்னையில் தேர்வு நடைபெறும்.
இப்பதவிக்கு, ஐ.டி.ஐ., மற்றும் 10ம் வகுப்பு கல்வித்தகுதி அடிப்படையில், எழுத்துத்தேர்வு நடைபெறும். தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, இப்பதவிக்கு விண்ணப்பித்தோரில், தகுதியுள்ளவர்களுக்கு மட்டும், தபால் மூலம் அனுப்பப்படும். மேலும் விவரங்களை, www.indcom.tn.gov.in இணையதள முகவரியில் அறியலாம்.
No comments:
Post a Comment