கால்நடை விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வெள்ளிக்கிழமை (ஜூன் 10) கடைசியாகும். ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு (பி.வி.எஸ்.சி.), பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம், பி.டெக் பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய நான்கு படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. நேரடி விண்ணப்ப விநியோக முறையை கால்நடை பல்கலைக்கழகம் ரத்து செய்துவிட்டது.
விண்ணப்பங்களை ஜூன் 10-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்க ஜூன் 17-ஆம் தேதி கடைசியாகும்.
தரவரிசைப் பட்டியல் எப்போது? ஜூலை முதல் வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் முதல் அல்லது 2-ஆவது வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment