Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, June 8, 2016

    பழைய பஸ் பாஸ் செல்லும்; அமைச்சர் உத்தரவு

    பள்ளி மாணவர்களுக்கு புதிய, பஸ் பாஸ் வழங்கும் வரை, கடந்த ஆண்டு பஸ் பாசை பயன்படுத்தி, இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்' என, போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை, தலைமைச் செயலகத்தில், அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்கள் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர் கூறியதாவது:

    * அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் வருவாயை பெருக்க, அனைத்து பஸ்களையும் சிறப்பாக பராமரிக்க வேண்டும். தினமும் சரியான நேரத்தில், பயணிகள் தேவைக்கேற்ப பஸ்களை இயக்க வேண்டும்

    * நடப்பு, 2016 - 17ம் ஆண்டுக்கான இலவச பஸ் பாஸ், மாணவர்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை, கடந்த ஆண்டுக்கான இலவச பஸ் பாசை பயன்படுத்தி, மாணவர்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்அனைத்து பஸ்களும் முழுமையாக சுத்தம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்த பின், பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும்.

    * சிக்கனமற்ற வழித்தடங்களை ஆய்வு செய்து, பொது மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில், சீரமைப்பு செய்ய வேண்டும். பின், தேவைப்படும் நேரங்களில், தேவைப்படும் வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.

    * டிரைவர்களிடம் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * வருமானத்தை அதிகரிக்க, விளம்பரம், பார்சல் சர்வீஸ் உட்பட, நவீன வழிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    No comments: