பள்ளிகளில், காலை சிற்றுண்டி சமைப்பது தொடர்பாக, சத்துணவு அமைப்பாளர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியின் படி, அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசு உத்தரவு, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை உறுதி செய்யும் வகையில், வாரத்தில், ஐந்து நாட்களுக்கு சத்தான ஆகாரமாக, சம்பா ரவை உப்புமா, சப்பாத்தி, ஜவ்வரிசி கஞ்சி, 'வெஜிடபுள்' கிச்சடி வழங்குவது குறித்து, ஆலோசனை கூட்டம், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தலைமையில் நடந்தது.
இதுகுறித்து, சத்துணவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மொத்தம், 26 லட்சம் மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. இதற்காக, சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, சென்னை நகரில், ஐந்து பள்ளிகளில் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி அளிக்க, பிரபல ஓட்டலில் பணிபுரியும் முதன்மை சமையல் கலைஞரை அழைக்க உள்ளோம். மற்ற மாவட்டங்களிலும், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment