திண்டுக்கல்லில் 10 அங்கீகாரம் பெறாத செவிலியர் பயிற்சி பள்ளிகள் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல்லில் அங்கீகாரம் பெறாத பல செவிலியர் பயிற்சி பள்ளிகள் இயங்குவதாகவும், இதில் பயின்ற மாணவர்கள் வேலைக்கு செல்லும் போது புறக்கணிப்படுவதாகவும், தனியார் மருத்துவமனைகளிலும் இவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை என்றும்சென்னை மருத்துவ இயக்குனரகத்திற்கு புகார்கள் சென்றன.இதையடுத்து மருத்துவ இணை இயக்குனர் ரவிக்கலா, திண்டுக்கல் நகரில் திடீர் சோதனை நடத்தினார். இதில் அங்கீகாரம் இல்லாத 10 செவிலியர் பயிற்சி பள்ளிகள் சிக்கின.
பத்து நிறுவனங்கள்:திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி அருகேயுள்ள அமிர்தா குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன், ரவுண்ட்ரோட்டில் உள்ள அண்ணா கல்வி நிறுனங்கள், மதர் தெரசா கல்வி நிறுவனங்கள், ஸ்கீம் ரோட்டில் உள்ள முத்து இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல், பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள செயின்ட் ஜான்ஸ் கல்வி நிறுவனங்கள்,
நாகல் நகர் புதுாரில் உள்ள ஜெகத்குரு பாரா மெடிக்கல், நாகல்நகர் பாரதி
மிஷின் மருத்துவ பாராமெடிக்கல் கல்லுாரி, விவேகானந்தா நகர் விசா குரூப்ஆப் இன்ஸ்டிடியூட், பழநிரோட்டில் உள்ள சுஷிருதா இன்ஸ்டிடியூட் ஆப் டெக் ஹெல்த் சர்வீஸ், பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள சபரி கல்வி நிறுவனங்கள் ஆகியவை அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டுள்ள இவை தொடர்ந்து செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ இணை இயக்குனர் ரவிக்கலா கூறியதாவது: செவிலியர் பயிற்சி பள்ளி நடத்த இந்தியன் மெடிக்கல் கவுன்சில், போர்டு ஆப் நர்சிங் கவுன்சிலில் அங்கீகாரம் பெற வேண்டும். திண்டுக்கல்லில்இந்த அமைப்புகளின் அங்கீகாரம் இன்றி செயல்பட்ட10 நிறுவனங்கள், தொடர்ந்து செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் மாணவர்களை சேர்த்து ஏமாற வேண்டாம். இந்த பள்ளிகளின் பட்டியல் மருத்துவ இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.
No comments:
Post a Comment