Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, March 16, 2016

    பி.இ. கலந்தாய்வு: ஏப்ரலில் விண்ணப்ப விநியோகம்?

    சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பி.இ. கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகத்தை முன்கூட்டியே ஏப்ரலில் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் 2014-இல் மே 3-ஆம் தேதியும், 2015-இல் மே 6-ஆம் தேதியும் தொடங்கியது.இந்த நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே 16-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 19-ஆம் தேதியும் நடைபெற உள்ளன.
    இதனால், மே 16 முதல் 19 வரை பெரும்பாலான மையங்களில் விண்ணப்ப விநியோகமும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதும் தடைப்படும். இதன் காரணமாக விண்ணப்ப விநியோகத்தை முன்கூட்டியே, ஏப்ரல் 25-இல் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டிருப்பதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஆன்-லைனில் பதிவிறக்கம்: இதுதவிர, கடந்த ஆண்டைப் போலவே கலந்தாய்வு விண்ணப்பங்களை w‌w‌w.a‌n‌na‌u‌n‌i‌v.‌e‌d‌u‌t‌n‌ea என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கமும் செய்து கொள்ள முடியும். கலந்தாய்வு ஜூன் மூன்று அல்லது நான்காவது வாரத்தில் தொடங்கப்பட்டு, ஜூலை 30-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டுவிடும். ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் பி.இ. முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என்று பல்கலை. வட்டாரங்கள் தெரிவித்தன.

    No comments: