ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) அரசு அறிவித்த 5 சதவீதம் சலுகை மதிப்பெண்ணுக்கு எதிரான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என கல்வித்துறை செயலர் சபிதாவிடம், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (டேக்டோ) வலியுறுத்தியது. டேக்டோ ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப 2012 ஜூனில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 150 மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதன் பின் நடந்த தேர்வில் 5 சதவீதம் சலுகை மதிப்பெண் அறிவிக்கப்பட்டு, 82 மதிப்பெண் பெற்றாலே பணிநியமனம் செய்யலாம் என அரசின் கொள்கை முடிவு அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக சிலர் நீதிமன்றம் சென்றதால் அரசு உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இவ்வழக்கை துரிதமாக நடத்தி முடிக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயனடைவர். இதுகுறித்து செயலர் சபிதாவிடம் விளக்கினோம். சலுகை மதிப்பெண் தொடர்பாக சிறப்பு அரசாணை பிறப்பிக்கவும் வலியுறுத்தினோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார், என்றார்.
No comments:
Post a Comment