பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
மதுரையில் மாவட்டத் தலைவர் சரவணமுருகன் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், பிளஸ் ௨ விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், முதன்மை மதிப்பீட்டாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.௨௦ம் தினப்படியாக ரூ.௧௮௦ம் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், அமைப்பு செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment