முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரித்து அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியிருப்பதாவது:அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் மொத்த பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும். இதற்கு கடந்த ஜனவரி 1ம் தேதி தகுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்களைக் கொண்ட முன்னுரிமை பட்டியலை தலைமை ஆசிரியர்கள் தயாரித்து அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தலைமை ஆசிரியர்கள் இந்த பட்டியலை தயாரித்து இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும். பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்கள் அந்த பள்ளியில் இல்லாவிட்டால் அதற்கான அறிக்கை தர வேண்டும். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் விடுபட்டால் அதற்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும். அவர் மீது பள்ளிக்கல்வி இயக்குனரகம் நடவடிக்கை எடுக்கும் என, கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment