இஸ்ரோவில் அடுத்தகட்டமாக வேலைவாய்ப்புகள் வரவுள்ளதால், மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என, பெங்களூரு, இஸ்ரோ மைய இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் இறுதியாண்டு மாணவர்களில் சிறந்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் ருத்ரமூர்த்தி தலைமை வகித்தார்.
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை விருதுகள் வழங்கி பேசுகையில், படிப்பதையும் தாண்டி புதிதாக செய்யமுடியும் என்ற குறிக்கோளுடன் செல்லும் போது நம்மால் புதிதாக கற்றுக்கொள்ள முடியும். இன்று கல்லுாரியை விட்டு வெளியே செல்லும் மாணவர்கள் சரியான திசையும், விசையும் இருந்தால் நினைத்த இலக்கை அடையமுடியும். இஸ்ரோவில் அடுத்தகட்டமாக வேலைவாய்ப்புகள் வரவுள்ளது.
அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு, நிறைய சாதிக்க வேண்டும், என்றார்.பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் முதல்வர் கிரிராஜ், முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஸ்ரீராம், செயலாளர் அரசு உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment