மூன்று மொபைல் போன் 'ஆப்ஸ்'களை பயன்படுத்த நமது ராணுவம் தடை விதித்துள்ளது. பாக். உளவு பார்ப்பதாக எழுந்த புகாரை அடுத்து இந்த ஆப்ஸ்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் மூலம் வீசாட், ஸ்மெஷ், லைன் ஆகிய 'ஆப்ஸ்'கள் பெருமளவு பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. இதில் ஸ்மெஷ் என்ற ஆப்ஸ் 'வாயிலாக பாகிஸ்தான் ராணுவம் நமது ராணுவத்தினரை உளவு பார்ப்பதாக சமீபத்தில் புகார் கிளம்பியது. இதையடுத்து கூகுள் வலைதளம் தனது பிளே ஸ்டோரில் இருந்த அதனை நீக்கியது.
பதன்கோட் விமானப்படை தாக்குதல்
இந்தியாவில் ராணுவ ரகசிய தகவல்கள், இந்திய ராணுவம் மேற்கொள்ளும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைள், எல்லையில் ராணுவ வீரர்களின் நடவடிக்கைகள், உயர் ராணுவ அதிகாரிகள் பற்றிய தகவல்களை பாகிஸ்தான் ராணுவம் எளிதில் வேவு பார்க்கிறது. இந்த ஆப்ஸ் மூலமாக தான் கடந்த ஜனவரி மாதம் பதன்கோட் விமானப்படை தளம் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தை பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.. அரேங்கேற்றியுள்ளது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.
ராணுவம் தடை
இதே போன்று மற்ற இரு 'ஆப்ஸ்'கள் மூலம், ராணுவம் தொடர்பான டெக்ஸ்ட் மெசேஜ்கள், புகைப்படங்கள், வரைபடங்களையும் பாக். வேவு பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ராணுவத்தின் முப்படை பிரிவினரும், 'ஸ்மெஷ், வீசாட், லைன்'' ஆகிய ஆப்ஸ்களையும் கருப்புபட்டியலில் வைத்து உத்தரவிட்டதுடன், ஸ்மார்ட் போன்கள் மற்றும் நோட்பேடுகளை பயன்படுத்தும் ராணுவத்தினர் இந்த ஆப்ஸ்களை உடனடியாக நீக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment