சிறந்த கைவினைஞர்களுக்கான, 2015ம் ஆண்டின் தேசிய விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசின் கைவினை மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கைத்தறி, கைத்திறன் துறையில், 40 சிறந்த கைவினைஞர்களுக்கு தேசிய விருதுகளும்; துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு, 40 தேசிய சான்றிதழ்களும் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. ஓய்வூதியம்விருது மற்றும் சான்றிதழ் பெறுபவர்களுக்கு, 60 வயதிற்கு மேல், மாதம், 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். கைவினை மேம்பாட்டு ஆணையர் அலுவலகம் ஏற்பாடு செய்யும் சந்தை சார்ந்த விழாக்களுக்கு, ரயிலில் பயணம் செய்ய, 20 ஆயிரம் ரூபாய் வரை உதவித் தொகை வழங்கப்படும்.
ஏப்ரல், 30க்குள்...மேலும், தகவல்களுக்கு, 04652-232361 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது, hmsecngl@nic.in என்ற மின் அஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை ஏப்ரல், 30க்குள், தமிழ்நாடு கைவினை மேம்பாடு கழகமான பூம்புகாரில் சமர்ப்பிக்கலாம். இது தொடர்பான விவரங்களையும், விண்ணப்பங்களையும், www.handicrafts.nic.in. என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment