அரசு துறையில், 'குரூப் - 2 ஏ' பிரிவு பணிகளுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யால், மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
'குரூப் - 2 ஏ' பதவிகளுக்கு, 2014 ஜூன், 29ல் தேர்வு நடந்தது. இதில், தேர்வு பெற்றவர்களுக்கு ஏற்கனவே, இருமுறை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. 41 உதவியாளர் மற்றும், ஏழு நேர்முக எழுத்தர் காலியிடங்களை நிரப்ப, மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, மார்ச் 17, 18ம் தேதிகளில் நடக்கும். விண்ணப்பதாரர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment