12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று வரும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று முதல் தொடங்கியது. தமிழகம் முழுவதும் 74 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடப்பதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் 4-ஆம் தேதி தொடங்கிய 12ம் வகுப்பு தேர்வுகள், வரும் ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெறுகிறது. 12ம் வகுப்பு தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6,550 பள்ளிகளில் இருந்து 8,39,697 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment