Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, March 15, 2016

    பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினம்:மாணவர்கள் திணறல்

    நேற்று நடந்த பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினமாக இருந்தது என்றும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு கணிசமாக குறையும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.தேனி மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் கருத்து:நிவேதா லட்சுமி (தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, தேனி): வேதியியல் பாடத்தில் 3, 5 மற்றும் 10 மதிப்பெண் வினாக்கள் எதிர்பார்த்தபடி கேட்கப்பட்டிருந்தது. பெரும்பாலான வினாக்கள் புத்தகம், 'புளூபிரின்ட்' அடிப்படையில் கேட்கப் பட்டிருந்ததால் பல வினாக்களுக்கு எளிமையாக பதில் அளிக்க முடிந்தது.


    ஒரு மதிப்பெண் வினாவில் எண் 70ல் (ஆ) பிரிவில் தொகுதி 11 என்பதற்கு பதிலாக, ரோமன் லெட்டர் வடிவத்திலான இரண்டு என இருந்ததால், பதில் அளிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. நன்றாக படிக்கும் மாணவர்கள் மட்டுமே இக்கேள்விக்கு பதில் அளிக்க முடியும்.

    எம்.லட்சுமி விநேகா (சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போடி): ஒரு மதிப்பெண், 3 மதிப்பெண்களுக்கான கேள்விகள் மிக எளிதாக இருந்தது. 10 மதிப்பெண் கேள்விகளில், சப் -டிவிஷனாக கொடுக்கப்பட்ட இரண்டு கேள்விகளில் ஒரு கேள்வி கடினம். இதுவரை கேட்காத கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. இத் தேர்வில் கடந்த முறை கேட்ட வினாக்கள் எதுவும் கேட்கப்படவில்லை. புத்தகம் முழுவதும் புரிந்து படித்திருந்தால் மட்டுமே, அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.
    பி.சரவணக்குமார் (என்.எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளி, கூடலுார்.): மூன்று மதிப்பெண் வினாக்களில், எதிர்பார்த்தது எதுவும் வர இல்லை. இதே போல் 10 மதிப்பெண் வினாக்களிலும் எதிர்பார்க்காதவைகள் அதிகம் இருந்தன. அதில் 64வது வினா புதியதாக இருந்தது. கட்டாய வினாக்கள் எளிதாக இருந்தன. ஒட்டு மொத்தத்தில் வேதியியல் வினாத்தாள் கடினமாக இருந்தது. சென்டம் எடுப்பது சிரமம்.

    முருகன் ( வேதியியல் ஆசிரியர், தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி): வினாத்தாள் 'புக்பேக்' , 'புளூபிரின்ட்' அடிப்படையாக அதிக வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால், சராசரி மாணவர்களும் எளிதில் தேர்ச்சியடைய வாய்ப்பு உள்ளது.
    ஒரு மார்க் வினாவில் 'ஏ' சீரியலில் கேட்கப்பட்டிருந்த 18வது வினா,' C5H12 O' என வாய்ப்பாட்டில் ஈதர் மாற்றமைப்புகளின் எண்ணிக்கை என' கேட்கப்பட்டிருந்தது.
    ஆனால் புத்தகத்தில் C4H10 O என இருக்கிறது. சீரியல் 20ல், மாணவர்கள் சிந்திக்கும்படி கேள்வி கேட்கப்பட்டிருந்தது. மாணவர்களை குழப்பும் வகையில் பல வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால், இத்தேர்வில் மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண் பெறுவது கடினம்.

    நுாற்றுக்கு நுாறு எண்ணிக்கை குறையும்:திருநெல்வேலியை சேர்ந்த வேதியியல் ஆசிரியர்கள் கூறியதாவது:பத்து மதிப்பெண் தேர்வில் 70வது கேள்வியான தொகுதி 11, வரிசை 4 என துவங்கும் கேள்வி தவறாகும்.தொகுதியை ரோமன் எண்ணில் குறிப்பிடுவதற்கு பதிலாக, 11 என குறிப்பிட்டிருப்பதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதே போல 5 மதிப்பெண் கேள்விகளில், பிளஸ் 2 தேர்வுகளிலேயே இதுவரை கேட்கப்படாத கேள்வி கேட்டுள்ளனர். அந்த கேள்விக்கான விடை புத்தகத்தில் இருந்தாலும், புத்தகத்தையே கரைத்து குடித்தது போல படித்த மாணவர்கள் தான் அதற்கு சரியான விடையை எழுதியிருக்க முடியும். நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு கணிசமாக குறையும்.இவ்வாறு தெரிவித்தனர்.

    No comments: