மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம், சென்னை எழும்பூரில், சங்க தலைவர் சிவா.தமிழ்மணி தலைமையில் நடந்தது. பின், சிவா.தமிழ்மணி கூறியதாவது: தமிழகத்தில் மிகவும் பழமையான மனப்பாட அடிப்படையிலான கல்வி முறை உள்ளது. இதை மாற்றி, தற்காலத்துக்கு ஏற்ப யோசித்து எழுதும், பாடத்திட்ட முறையை அறிமுகம் செய்ய வேண்டும். பணி நியமன பணிகளை மேற்கொள்ள, தேர்வாணைய குழு போல, சுயமாக செயல்படும் கல்வி ஆணையம் அமைக்க வேண்டும்.
இடமாறுதல் கலந்தாய்வு முறையை மாற்ற வேண்டும். குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகளின் மீதான விசாரணையை விரைந்து முடித்து, அவர்களின் ஓய்வூதிய பலனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 11 கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச், 24ல் உண்ணாவிரதம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment