பிளஸ்–2 தேர்வு கடந்த 4–ந் தேதி தொடங்கியது. நேற்று ஆங்கிலம் முதல் தாள் பரீட்சை நடந்தது. தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ–மாணவிகள் கூறுகையில், கேள்விகள் எளிமையாக இருந்தன என்றும், மழை வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கற்றல் கையேட்டில் இருந்து தான் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன என்றும் தெரிவித்தனர்.
நேற்று காப்பி அடித்ததாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு மாணவரும், கரூர் மாவட்டத்தில் ஒருவரும், அரியலூர் மாவட்டத்தில் ஒருவரும், கடலூர் மாவட்டத்தில் ஒருவரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பேரும், சென்னை மாவட்டத்தில் 3 பேரும் பிடிபட்டனர். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment