பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக திருவள்ளூர், தஞ்சாவூரில் 6 பேர் பிடிபட்டுள்ளனர். தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. மொழிப் பாடம் முதல் தாள் தேர்வு கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 2-ஆம் தாள் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் ஒரு பள்ளி மாணவர், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 தனித் தேர்வர்கள் என மொத்தம் 6 பேர் தேர்வுக் கூட முறைகேடுகளில் ஈடுபட்டதாக கண்காணிப்பு அலுவலர்களிடம் பிடிபட்டனர். இதையடுத்து அவர்கள் அறையில் இருந்து வெளியேற்றப்பட்டதாகத் தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment