சென்னையில் பிரம்மாண்ட ராகவேந்திரர் கோயிலை கட்டியுள்ள நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ், ராகவேந்திரா அறக்கட்டளை சார்பில், ஏழை எளியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு மற்றும் முதியோர்களுக்காக இல்லம் நடத்தி வரும் லாரன்ஸ், மாற்றுத் திறனாளிகளுக்கு நடன பயிற்சியும் கொடுத்து,அவர்களை கலைஞர்களாகவும் உயர்த்தும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.
மேலும், இருதய நோயால் பாதிக்கப்படும் ஏழை குழந்தைகளுக்கு, அவரது சொந்த செலவில் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்கிறார். இதுவரை, 217 குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ள லாரன்ஸ், 128வதாக ஒரு குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவினார். தற்போது அந்த குழந்தையின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்து, குழந்தையும் தீவிர குணமடைந்துள்ளது.
No comments:
Post a Comment