சாதாரண, நடுத்தர குடும்பங்களை பாதிக்கக் கூடிய வகையில், பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம், ஒவ்வொரு காலாண்டுக்கும் மாற்றியமைக்கப்படும் என, மத்திய அரசு, பிப்., 16ம் தேதி அறிவித்தது.
அதன்படி, 2016 - 17 நிதியாண்டில், ஏப்., 1 முதல், ஜூன் 30ம் தேதி வரையிலான, முதல் காலாண்டுக்கான வட்டி விகிதங்கள், நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு உள்ளன.
கடந்த மாதம், 16ம் தேதி, தபால் நிலையங்களுக்கான குறுகிய கால முதலீடுகளுக்கு, 0.25 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டது. தற்போது, பெரும்பாலான சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைக்கப்பட்டு உள்ளது. தபால் நிலைய சிறுசேமிப்புக்கான வட்டி, 4 சதவீதமாக தொடர்கிறது.
No comments:
Post a Comment