ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மாநாடு, கோவில்பட்டியில், கடந்த, 5ம் தேதி துவங்கியது. மூன்று நாள் மாநாட்டில், பல்வேறு தலைப்புகளில் முக்கிய நிர்வாகிகள் பேசினர். மாநில துணைத் தலைவர் ஜோசப் ரோஸ் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சம்மேளன மாநிலத் தலைவர் முத்து சுந்தரம் உள்ளிட்டோர் பேசினர்.கூட்டத்தில், 'மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஊழலை ஒழிக்க, லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும். மத்திய அரசு கல்வியை வணிக பொருளாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்' என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment