தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராசாராம், நேற்று பொறுப்பேற்றார்.
இவர், ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலை, சட்டத்தில் இளநிலை மற்றும் முனைவர் பட்டங்களை பெற்றுள்ளார். தமிழக அரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலராக பணியாற்றி வந்தார். கடந்த, 30 ஆண்டுகளாக, பல துறைகளில், பல நிலைகளில், பணியாற்றிய பட்டறிவு மிக்கவர்.
பன்முக ஆற்றல் கொண்டவர். தமிழிலும், ஆங்கிலத்திலும், இதுவரை, 30க்கும் மேற்பட்ட நுால்களை எழுதி உள்ளார். உலகத் திருமறையாம் திருக்குறள் மீது, மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதில் உள்ள கருத்துக்களை, அரிய நுால்களாக வெளியிட்டு வருகிறார். திருக்குறளுக்கு சிறந்த ஆங்கில மொழியாக்கம் செய்து, பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளார். இந்த நுாலுக்கு, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளார்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், இவரால் படிக்கப்பட்ட, ஆய்வுக் கட்டுரைகள், உலக அறிஞர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. தெற்காசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள், அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்று வந்துள்ளார்.
No comments:
Post a Comment