இன்று காலை 11 மணி முதல் 1.30 மணி வரை ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னையில் கூடியது. நேற்றைய தினம் தமிழக அரசு, ஜாக்டோ சார்பில் 5 பிரதிநிதிகள் பன்கு பெற அனுமதி வழங்கியது. இதையடுத்து இன்று கூடிய ஜாக்டோ கூட்டத்தில் அனைத்து ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் பங்குபெற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. பின்பு இயக்குனர் அவர்கள் ஜாக்டோ சார்பில் 10 பேர் பங்குபெறலாம் என தெரிவித்தார்.
21 பிரதி நிதிகளும் பேச்சுவார்த்தையில் பங்குபெற வேண்டுமென ஜாக்டோ சார்பில் திரு.செ.முத்துசாமி, திரு.ரங்கராஜன், திரு.ராபின்சன், திரு.முருகேசன், திரு.சாமி சத்தியமூர்த்தி, திரு.இளங்கோவன் ஆகியோர் தலைமை செயலகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதில் 21 பிரதி நிதிகளும் பேச்சுவார்த்தையில் பங்குபெறலாம் என அரசால் இசைவு தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் அரசுடனான பேச்சுவார்த்தையில்,
*இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனை குறித்து திரு.ரங்கராஜன் அவர்களும்,
*பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து திரு.செ.முத்துசாமி அவர்களும்,
*ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து திரு.மீனாட்சி சுந்தரம் அவர்களும் மற்றும் ஏனைய கோரிக்கைகள் குறித்து ஒவ்வொரு பிரதி நிதியும் பேச உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றன.
தகவல் : தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

No comments:
Post a Comment