அரசு நிதி வருவாயில் 90 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத் திற்கு செல்கிறது என அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ள தகவல் தவறானது,'' என, சங்க மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
தேனியில் அவர் கூறியதாவது:20 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தலைமையில் 67 சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பிப். 10 முதல் ஈடுபடுகின்றன. மாநில முழுவதும் 3 லட்சம் அரசு ஊழியர்களும், 2 லட்சம் தொகுப்பூதியம் பெறுபவர்களும் பங்கேற்பர்.அரசு ஊழியர் வசூலித்த தானே புயல் நிவாரண நிதியை கூட முதல்வர், தலைமை செயலாளரை சந்தித்து வழங்க முடியவில்லை. சங்க பிரதிநிதிகளை சந்திப்பது இல்லை.
அரசின் நிதிவருவாயில் 90 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடுவதாக அமைச்சர் பன்னீர் செல்வம் தவறான தகவலை கூறி வருகிறார். அரசின் நிதிவருவாய் 41,215,57 லட்சம் கோடி. இதில் கல்வி மானியத்திற்கு 40 சதவீத நிதி செலவிடப்படுகிறது. மீதியுள்ள தொகை ரூ.30 ஆயிரம் கோடி. இதில் முதல்வர்,அமைச்சர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர்அதிகாரிகள் சம்பளம் பெறுகின்றனர். 20 ஆயிரம் கோடியில் 8 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளத்திற்காக செலவிடப்படுகிறது. இது அரசின் வருவாயில் 30 சதவீதம், என்றார்.
No comments:
Post a Comment