தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) அமைப்பு தங்களின் 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக தமிழகமெங்கும் போராட்டம் நடத்தி வருகிறது. ஆறாவது ஊதியக்குழுவில், தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் போல் சமமாக வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தங்களின் 15 அம்ச கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று ஜாக்டோ அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
நேற்று சென்னை உள்பட பல பகுதிகளிலும் இந்த அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். சென்னை தலைமை செயலகத்தில் நோக்கி சென்ற பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஜாக்டோ அமைப்பினரின் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாது என்று மாநில பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment