“தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் இன்று மூடப்படும்,” என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ஜோசப்சேவியர் சிவகங்கையில் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
தமிழக ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான சம்பளம், புதிய பென்ஷன் திட்டம் ரத்து உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 16 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த ஜேக்டோ கூட்டமைப்பு ஜன.,30 முதல் பிப்.,1 வரை மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகிறது.
இன்று நடக்கும் மறியலில் அனைத்து சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்கும் விதமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் இன்று மூடப்படும். சுய உதவி பள்ளிகளையும் மூட வேண்டும் என, பள்ளி நிர்வாகத்திடம் மாநில நிர்வாகிகள் சார்பில் பேசியுள்ளோம், என்றார்.
No comments:
Post a Comment