மூன்றாம் பருவத்திற்கான பாடங்களை கற்பிக்க போதிய அவகாசம் இன்மையால், அவசரகதியில் பாடங்களை எடுக்கும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், மூன்றாம் பருவத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிட்டுள்ளது, ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மழை, வெள்ளம் காரணமாக, அரையாண்டு தேர்வுகள், இரண்டாம் பருவத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு, கடந்த மாதம் இறுதியில் நடத்தி முடிக்கப்பட்டது. அதன் பின்பே, மூன்றாம் பருவத்துக்கான பாடங்கள் துவங்க, அனுமதி வழங்கப்பட்டது. கடந்த மாதம், பொங்கல் விடுமுறை, ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம், கணக்கெடுப்பு பணி போன்றவற்றால் வகுப்புகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், மூன்றாம் பருவத்துக்கான பாடங்கள் தற்போது தான் துவங்கி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, ஏப்.,5 முதல் மூன்றாம் பருவ தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 25ம் தேதிக்குள் அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வுகள் நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதும், பெரும்பாலான ஆசிரியர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விடுமுறை நாட்கள் தவிர்த்து பாடங்கள் எடுக்க குறைந்த கால அவகாசமே இருப்பதால், பாடங்களை முழுமையாக பயிற்றுவிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
அவசரகதியில் பாடங்களை எடுக்கும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆல்-பாஸ் திட்டத்தில் அனைவரும் தேர்ச்சி பெற்றுவிடுவர் என்றாலும், மதிப்பீடு செய்யும் முறையில் இம்முறை உண்மை தன்மை எதிர்பார்க்க இயலாது என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே போல், பிளஸ் 1 மாணவர்களுக்கு, மார்ச் 11 முதல், 31ம் தேதி வரை முழு ஆண்டு தேர்வுகள் நடக்கவுள்ளதாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான கேள்வித்தாள், ஏப்., 1ல் அந்தந்த தேர்வு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment