அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராம நிர்வாக அலுவலரான, வி.ஏ.ஓ., பதவியில், 813 காலியிடங்களுக்கு, 28ம் தேதி, தேர்வு நடக்க உள்ளது. இதற்கு, 10 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அதன் விவரம், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது; சரிபார்த்துக் கொள்ளலாம்.
சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய கட்டணம் செலுத்தி, அதன் விவரம் இணையதளத்தில் இல்லாவிட்டால், பணம் செலுத்திய விவரத்தை, அதே இணையதள பக்கத்தில் உள்ள படிவத்தில், பிப்., 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment